search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குமரியில் மழை நீடிப்பு"

    குமரியில் மழை நீடிப்பு : பேச்சிப்பாறையில் இருந்து கூடுதல் தண்ணீர் வெளியேற்றம் - சாகுபடி பணியில் தீவிரம் காட்டும் விவசாயிகள்
    நாகர்கோவில்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியதையடுத்து குமரி மாவட்டத்திலும் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 

    நேற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. நாகர்கோவிலில் இன்று அதிகாலையில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. ஆணைக்கிடங்கு பகுதியில் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. அங்கு அதிகபட்சமாக 27 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    முள்ளங்கினாவிளை, புத்தன் அணை, குருந்தன்கோடு, குளச்சல், ஆணைக்கிடங்கு, பூதப்பாண்டி, மயிலாடி, கொட்டாரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் இன்று காலையில் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. 

    தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரண மாக மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது.

    பேச்சிப்பாறை அணை யிலிருந்து கன்னிப்பூ சாகுப டிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிவதை அடுத்து அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். 

    அணையில் இருந்து நேற்று 500 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு அதிக ரிக்கப்பட்டு உள்ளது. அணை யிலிருந்து மதகுகள் வழியாக 650 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையிலிருந்து வெளி யேற்றப்படும் தண்ணீர் தோவாளை, அனந்தனாறு சானல்களில் திறந்து விடப்பட்டுள்ளது. 

    மழையும் பெய்து வரும் நிலையில் சானல்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 45.11 அடியாக இருந்தது. அணைக்கு 505 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 57.05 அடியாக உள்ளது. 204 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றார்-1 அணை நீர்மட்டம் 13.12 அடியாகவும், சிற்றார்-2 அணை நீர்மட்டம் 13.22 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 17.70 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 27.72 அடியாகவும் உள்ளது.

    பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரின் காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வெளியேற்றப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டுள்ளதால் திற்பரப்பு அருவியில் மிதமான தண்ணீர் கொட்டி வருகிறது.

    அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குடும்பம் குடும்பமாக வந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்தக் குளியலிட்டு செல்கிறார்கள். சாரல் மழையும் பெய்து வருவதால் திற்ப ரப்பில் ரம்மியமான சூழல் நிலவுகிறது.
    ×